திருவிவிலியம்
![]() |
| பரிசுத்த வேதாகமம் |
![]() |
| பரிசுத்த வேதாகமம் |
ஆண்டு (கி.மு) |
நிகழ்வு -- காலம்
| பழய ஏற்பாட்டு நூல் |
| கி.மு. 2000 - 1750 (ஏறக்குறைய) | (ஏறக்குறைய) 1900; ஆபிரகாம் கானான் நாட்டுக்கு வருதல். ஈசாக்கு, யாக்கோபு (இஸ்ரயேல்), பன்னிரு குலத்தலைவர்கள். யோசேப்பு எகிப்து மன்னரின் ஆலோசகர் ஆகுதல். | தொடக்கநூல், அதிகாரங்கள் 12-50 ("யாவே" மரபுகள்) |
| கி.மு.1700 - 1250 (ஏறக்குறைய) | யாக்கோபின் வழிமரபினர் எகிப்தில் அடிமைகளாகுதல் | |
| கி.மு. (ஏ) 1250 | விடுதலைப் பயண நிகழ்வு; எகிப்திலிருந்து இஸ்ரயேலரை மோசே அழைத்துச் செல்லல். பாலைநிலப் பயணம். மோசே சீனாய் மலையில் திருச்சட்டம் பெறல். | விடுதலைப் பயணம் நூல் ("யாவே" மரபுகள்); |
| கி.மு. 1200 - 1020 | நீதித்தலைவர்கள் காலம் | |
| கி.மு. 1020 - 922 | பொற்காலம்; சவுல் (ஏ) 1020-1000; தாவீது (ஏ) 1000-962; சாலமோன் (ஏ) 962-922). ஒருங்கிணைந்த இஸ்ரயேல் அரசு. | "எலோகிம்" மரபு உருவாதல் |
| கி.மு. 922 -721 | நாடு பிளவுபடல்; வடக்கே இஸ்ரயேல், தெற்கே யூதா பல அரசர்களால் ஆளப்படல். | 2 அரசர்கள், 2 குறிப்பேடு, எரேமியா 39-44; 52. (ஐந்நூலில் "எலோகிம்", "இணைச்சட்டம்" பண்புடைய பகுதிகள்), ஆமோஸ், ஒசேயா, ஏசாயா(1), மீக்கா |
| கி.மு. 722 | வடக்கு அரசில் சமாரியா வீழ்ச்சியடைதல் நாடு கடத்தப்படும் முன் வாழ்ந்த இறைவாக்கினர்கள் | "யாவே" மரபும் "எலோகிம்" மரபும் இணைதல். "இணைச்சட்டம்" மரபு தோன்றுதல். செப்பணியா, நாகூம், அபக்கூக்கு, ஏரோமியா |
| கி.மு. 587 | பாபிலோனியாவுக்கு யூதர்கள் நாடுகடத்தப்படல் | "குருக்கள்" மரபு உருவாதல் திருப்பாடல்கள் 137. (ஐந்நூலில் "குருக்கள்" பண்புடைய பகுதிகள்) இணைச்சட்டம், யோசுவா, நீதித் தலைவர்கள், 1,2 சாமுவேல், 1,2 அரசர்கள். எசேக்கியேல், எசாயா(2), புலம்பல் |
| கி.மு. 539 | பாரசீக மன்னர் சைரசு யூதர்கள் தாய்நாடு திரும்ப அனுமதி அளித்தல். | |
| கி.மு. 537 | எருசலேமில் புதிய கோவிலுக்கு அடித்தளம் இடுதல் | மேலே தரப்பட்ட நான்கு மரபுகளும் இணைதல். எசாயா(3), ஆகாய், செக்கரியா, யோபு, மலாக்கி, ஒபதியா |
| கி.மு. 539 - 333 | பாலஸ்தீன நாட்டில் பாரசீக ஆட்சிக் காலம். | |
| கி.மு. 458 - 390 கி.மு. 445 - 420 | எஸ்ரா நெகேமியா ஆகியோர் கொணர்ந்த சீர்திருத்தம் | யோவேல், யோனா, நீதிமொழிகள் திருப்பாடல்கள். 1,2 குறிப்பேடுகள் எஸ்ரா, நெகேமியா நூல்கள் |
| கி.மு. 333 - 63 கி.மு. 333 - 300 கி.மு. 300 - 200 கி.மு. 200 -175 | பாலஸ்தீன நாட்டில் கிரேக்க ஆட்சி. பெரிய அலக்சாந்தர் காலம் தாலமியர் ஆட்சி செலூக்கர் ஆட்சி | சபை உரையாளர், தோபித்து சீராக், எஸ்தர், தானியேல், யூதித்து, பாரூயஅp;க்கு |
| கி.மு. 175 -135 | கிரேக்க ஆட்சிக்கு எதிராக மக்கபேயர் கிளர்ச்சி | சாலமோனின் ஞானம் |
| கி.மு. 134 - 63 | அஸ்மோனியர் (மக்கபேயர்) பாலஸ்தீனாவை ஆட்சிபுரிதல் | 1,2 மக்கபேயர் |
| கி.மு. 63 கி.மு. 63 - 4 | உரோமைத் தளபதி பொம்பேயி எருசலேமைக் கைப்பற்றல். பாலஸ்தீனாவில் உரோமை ஆட்சி. | |
| கி.மு. 37 - 4 | உரோமையரால் நியமிக்கப்பட்ட பெரிய ஏரோது பாலஸ்தீனாவில் ஆட்சி. |
பழைய ஏற்பாட்டின் தோற்றம்:
|
| வாய்மொழி மரபு; கி.மு. 2000 - கி.பி. 90 |
| எழுத்து அமைப்பு; கி.மு. 950 - கி.பி. 90 |
| பதிப்பு வடிவம்; கி.மு. 586 - கி.பி. 90 |
| ஆண்டு | நிகழ்வு -- காலம் | புதிய ஏற்பாட்டு நூல் |
| கி.மு. 6-4 | இயேசு பிறப்பு (பெரிய ஏரோது இறப்பதற்கு முன்) | |
| கி.மு. 6 - கி.பி. 34 கி.மு. 4 - கி.பி. 6 கி.மு. 4 - கி.பி. 39 கி.மு. 4 - கி.பி. 34 | பெரிய ஏரோதின் மகன்கள் ஆட்சி; அர்க்கெலா ஏரோது அந்திப்பா பிலிப்பு | |
| கி.பி. (ஏ) 27 -30 (ஏ) 27 (ஏ) 30 | இயேசுவின் திருமுழுக்கு; இயேசுவின் திருப்பணிக்காலம்; திருப்பணித் தொடக்கமும் இயேசுவின் இறப்பும் உயிர்த்தெழுதலும் | |
| கி.பி. (ஏ) 30 - 63 | திருத்தூதர் பவுலின் பணிக்காலம் | ஐயத்திற்கு இடமின்றி பவுல் எழுதிய திருமுகங்கள் (உரோமையர், 1 கொரிந்தியர், 2 கொரிந்தியர், கலாத்தியர், பிலிப்பியர், 1 தெசலோனிக்கர், பிலமோன்) |
| கி.பி. 37 - 44 | முதலாம் ஏரோது அகிரிப்பா | |
| கி.பி. 66 - 70 | உரோமை ஆட்சிக்கு எதிராக யூதர்களின் முதல் கிளர்ச்சி | |
| கி.பி. 70 | உரோமையர் எருசலேமை முற்றுகையிட்டு அழித்தல் | |
| கி.பி. 70 - 100 | புதிய ஏற்பாட்டின் பெரும்பான்மையான நூல்கள் எழுத்துவடிவம் பெற்ற காலம் | மாற்கு, மத்தேயு, லூக்கா, திருத்தூதர் பணிகள், எபேசியர், கொலோசியர், 2 தெசலோனிக்கர், 1 திமொத்தேயு, 2 திமொத்தேயு, தீத்து, எபிரேயர், யாக்போபு, 1 பேதுரு, 1 யோவான், 2 யோவான், 3 யோவான், யூதா, திருவெளிப்பாடு. |
| கி.பி. 71 - 132 | உரோமைப் பேரரசர் பலரின் ஆட்சியின் கீழ் பாலஸ்தீனம் | 2 பேதுரு |
| கி.பி. 132 - 135 | யூதர்கள் உரோமையருக்கு எதிராக நடத்திய இரண்டாம் கிளர்ச்சி |
முன்னுரை :
திருவிவிலியம் (The Holy Bible) என்பது கிறிஸ்தவர்களுடைய சமய நம்பிக்கைக்கு அடிப்படையாக உள்ள புனித நூல். அதை ஒரு நூல் என்பதைவிட நூலகம் என்றே கூறிவிடலாம். ஏனென்றால் விவிலியம் என்பது பல நூல்களை உள்ளடக்கிய ஒரு நூல் தொகுப்பு. "மனித மொழியில் அமைந்த கடவுளின் வார்த்தை" என விவிலியத்தைக் கிறிஸ்தவர் போற்றுவர்.
விவிலியம் என்பதற்குக் கிறிஸ்தவ தமிழ் மரபில் "சத்திய வேதம்", "வேதாகமம்", "திருமறைநூல்", "திருவிவிலியம்" என்னும் பல பெயர்கள் உண்டு.
கிறிஸ்தவர்கள் விவிலியத்தைப் "பழைய ஏற்பாடு" என்றும் "புதிய ஏற்பாடு" என்றும் இரு பெரும் பாகங்களாகப் பிரிப்பர்.
பழைய ஏற்பாட்டு நூல்கள் இயேசு கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலும், புதிய ஏற்பாட்டு நூல்கள் அவருக்குப் பிற்பட்ட காலத்திலும் எழுந்தன.
இன்றும்கூட, பழைய ஏற்பாட்டு ஆகமங்கள் யூத மக்களின் சமய நூலாக விளங்குகின்றன. அந்நூல்களில் பெரும்பான்மையானவை (39) எபிரேய மொழியிலும், ஒரு சில (7) கிரேக்க மொழியிலும் எழுதப்பட்டவை ஆகும். கிரேக்க மொழியில் எழுதப்பட்ட விவிலிய நூல்கள் எல்லா யூதராலும் அதிகாரப்பூர்வமான திருநூல் தொகுப்பில் ஏற்கப்படவில்லை. இந்த வேறுபாடு கிறிஸ்தவர்களுடைய சபைகளிலும் துலங்குகிறது. அதாவது, கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டின் எபிரேய மற்றும் கிரேக்க நூல்களைத் திருநூல் முறையில் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால், சீர்திருத்த சபையினர் (புரோட்டஸ்டாண்டு) எபிரேய மொழியில் எழுதப்பட்ட பழைய ஏற்பாட்டு நூல்களை மட்டுமே திருநூலின் பகுதிகளாக ஏற்பர். கிரேக்க மொழியில் எழுதப்பட்ட நூல்களை அதிகாரப்பூர்வமானவையாக ஏற்பதில்லை. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இந்நூல்களை "இணைத் திருமுறை நூல்கள்" (Deutero-canonical) என்று அழைப்பர். சீர்திருத்த சபையினர் "விவிலியப் புற நூல்கள்" (Apocrypha) என்பர்.
புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ஐயும் எல்லாக் கிறிஸ்தவ சபையினரும் அதிகாரப்பூர்வமானவையாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்நூல்கள் கிரேக்க மொழியில் எழுதப்பட்டவையாகும்.
விவிலிய நூல்கள் உருவான வரலாறு :
இருபத்தோராம் நூற்றாண்டில் வாழ்கின்ற நாம் விவிலியத்தைப் புரட்டும்போது அங்கே பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடுமாக பல புத்தகங்கள் வரிசையாகத் தரப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இந்த நூல்கள் ஒவ்வொன்றும் ஓர் ஆசிரியரால் எழுதப்பட்டதுபோலத் தோன்றலாம். ஆனால், விவிலிய நூல்கள் அவ்வாறு தோன்றவில்லை. ஏதோ ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஆசிரியர் ஒருவர் ஏட்டையும் எழுதுகோலையும் கையில் எடுத்து, தம் நூலை எழுதிவிடவில்லை. மாறாக, விவிலியத்தில் காணப்படுகின்ற ஒவ்வொரு நூலுக்கும் ஒரு வரலாறு உள்ளது. அந்த நூல்கள் ஒவ்வொன்றும் பல படிகளைத் தாண்டி வந்த பின்னரே இன்று நாம் பார்க்கின்ற வடிவத்தைப் பெற்றன.
இந்த வரலாற்றுப் படி வளர்ச்சியை நாம் மூன்று கட்டங்களில் நிகழ்ந்ததாகக் கூறலாம். அவையாவன:
|
வாய்மொழி மரபு, எழுத்துவழி மரபுகளின் இறுதி எழுத்து வடிவம்:
மேல்கூறிய விதத்தில் வாய்மொழி மரபும் எழுத்துவழி மரபும் இறுதி எழுத்து வடிவமும் வெவ்வேறு விதத்தில் இணையவும் பிணையவும் கூடும் என்றதுமே, விவிலிய நூல்கள் தொடக்க கால மரபைத் துல்லியமாகப் பிரதிபலிக்கவில்லை என்று நாம் முடிவுசெய்தல் சரியல்ல. ஏனென்றால், விவிலிய நூல்கள் சமய நம்பிக்கையின் அடிப்படையில் உருவாகி வளர்ந்தவை. அவற்றில் காணப்படும் செய்தி சமய நம்பிக்கையை நம்மில் வளர்ப்பதற்காக அமைந்ததே தவிர, நமக்கு அறிவியல் சார்ந்த கருத்துக்களை வழங்குவதற்காகவோ வரலாற்று நிகழ்ச்சிகளை நடுநிலை நின்று விமர்சிப்பதற்காகவோ எழுதப்படவில்லை. எனவே, கடவுள் மனிதருடைய முழுநலனுக்காக எதைஎதை எல்லாம் நமக்கு வழங்க விரும்பினாரோ அது விவிலியத்தில் உள்ளது என நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆகவே, ஒரு குறிப்பிட்ட காலத்தில் எழுந்த விவிலியத் தொடர்கூற்று ஒரு சில தலைமுறைகளுக்குப் பிறகு வேறு பொருளில் புரிந்துகொள்ளப்பட்டது என்பதற்காக அது தன் முக்கியத்துவத்தை இழந்துவிடாது.
எத்தனையோ தலைமுறைகளான மக்கள் இந்த விவிலியத்திலிருந்து தங்கள் சமய நம்பிக்கை சார்ந்த ஆன்மீக வாழ்வுக்கு உந்துதல் பெற்று வந்துள்ளார்கள் என்பதே நாம் விவிலியத்தை மதித்துப் போற்றி, அதை நம் வாழ்வுக்கு வழிகாட்டியாகக் கொள்வதற்குப் போதுமான காரணம் ஆகும்.
--------------------
மொழிபெயர்ப்பு
விவிலியத்தின் பண்டைக் கால மொழிபெயர்ப்புகள்:
எபிரேய மொழி பேசிய யூத மக்களிடையே எழுந்த நூல்கள் என்பதால் பழைய ஏற்பாட்டு நூல்கள் எபிரேய மொழியிலேயே எழுதப்பட்டன. ஆனால், கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் யூதர்கள் சிலர் பாலஸ்தீனாவுக்கு வெளியே சென்று கிரேக்கப் பகுதிகளில் குடியேறினர். நாளடைவில் அவர்கள் தங்கள் சொந்த மொழியான எபிரேயத்தை மறந்துவிட்டதால் அம்மொழியில் இருந்த தங்கள் திருநூலைப் படிக்க அவர்களால் இயலாமல் போயிற்று. எனவே, அவர்கள் பேசிய கிரேக்க மொழியில் விவிலியம் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த முதல் மொழிபெயர்ப்பு "எழுபதின்மர் விவிலியம்" (Septuagint) என்று அழைக்கப்படுகிறது. எழுபது எபிரேய அறிஞர்கள் இந்த மொழிபெயர்ப்பைச் செய்தார்கள் என்னும் மரபுவழிச் செய்தியின் அடிப்படையில் இப்பெயர் எழுந்தது. இத்தோடு, கிரேக்க மொழியில் நேரடியாக எழுதப்பட்ட 7 நூல்களும் சேர்க்கப்பட்டன.
கிறிஸ்து பிறந்த காலத்தில் இன்று நாம் பழைய ஏற்பாடு என்று கூறுகின்ற விவிலியப் பகுதி மட்டுமே "முழு" விவிலியமாக இருந்தது. அதையே இயேசு வாசித்தார் (காண்க லூக்கா 4;16-28); தொழுகைக் கூடங்களில் வாசிக்கக் கேட்டார். இயேசு யூத ஆன்மீக நெறியில் வளர்வதற்குத் துணையாக இருந்தது இந்த விவிலியம்தான்.
இயேசுவின் போதனையைக் கேட்டு, அவர் புரிந்த அதிசய செயல்களைப் பார்த்து அனுபவித்த மக்கள், அல்லது அந்த அனுபவத்தைப் பிறர் வழி பெற்றவர்கள் அந்த அனுபவத்துக்கு எழுத்து வடிவம் கொடுத்தனர். இவ்வாறு எழுந்த நூல்களே புதிய ஏற்பாடு என்று அழைக்கப்படுகின்றன. இவை அனைத்துமே கிரேக்க மொழியில்தான் எழுதப்பட்டன. புதிய ஏற்பாட்டு நூல்களின் எண்ணிக்கை 27 ஆகும்.
பாலஸ்தீனாவைச் சூழ்ந்த பகுதிகளில் வாழ்ந்த கிறிஸ்தவ மக்கள் நடுவே கிரேக்க மொழி வழக்கத்திலிருந்தது. பின்னர் கிறிஸ்தவ சமய நம்பிக்கை உரோமைப் பேரரசின் பகுதிகளில் விரிவாகப் பரவத் தொடங்கியதும் கிரேக்க விவிலியத்தை இலத்தீன் மொழியில் பெயர்க்க வேண்டிய தேவை எழுந்தது. தூய எரோணிமுசு (St. Hieronymus; ஆங்கில வழக்கில் St. Jerome) என்பவர் கி.பி. நான்காம் நூற்றாண்டில் செய்த இலத்தீன் மொழிபெயர்ப்பு மிகப் புகழ்பெற்றது. இதை "வுல்காத்தா" (Vulgate) மொழிபெயர்ப்பு என அழைப்பர். பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பெயர்ப்பு என்பது அதன் பொருளாகும். இந்த இலத்தீன் மொழிபெயர்ப்பின் அடிப்படையில்தான் நீண்டகாலமாகக் கத்தோலிக்கத் திருச்சபையின் மொழிபெயர்ப்புக்கள் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பழைய மொழிகளில் விவிலியம் திருப்பப்பட்டதற்கு எடுத்துக்காட்டாக சிரிய மொழி விவிலியம் (கி.பி. 2ஆம் நூற்றாண்டு), கோப்திய மொழி விவிலியம் (கி.பி. 3ஆம் நூற்றாண்டு), எத்தியோப்பிய மொழி விவிலியம் (கி.பி. 7ஆம் நூற்றண்டு) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
விவிலிய நூல்கள் தொடக்க காலத்தில் "எழுத்துப் படையல்கள்" (Scriptures) என்னும் பொதுப் பெயராலேயே வழங்கப்பட்டன. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த தூய இரனேயுஸ் என்னும் லியோன் நகர ஆயர், கிறிஸ்துவைப் பற்றியும் தொடக்க காலத் திருச்சபை பற்றியும் விவிரிக்கின்ற திருநூல்களைப் "புதிய ஏற்பாடு" (New Testament) என்று அழைத்தார். "ஏற்பாடு" என்பது கடவுள் மனிதரோடு செய்துகொண்ட "உடன்படிக்கையை" (Covenant) குறிக்கும். புதிய ஏற்பாட்டுக்கு முன் அமைந்த நூல்கள் "பழைய ஏற்பாடு" (Old Testament) அல்லது பழைய உடன்படிக்கை என்னும் பெயரைப் பெற்றன. கி.பி. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த தூய கிறிசோஸ்தோம் என்னும் காண்ஸ்தாந்திநோப்புள் ஆயர், பழைய-புதிய ஏற்பாடுகளின் தொகுப்பை "Biblia" (Bible) என்று அழைத்தார். அதுவே, இன்றைய தமிழ் மொழிபெயர்ப்பில் "விவிலியம்" என்ற பெயரைப் பெறலாயிற்று.
விவிலியம் என்னும் சொல்லுக்கு மூலமாகிய கிரேக்கச் சொல் (papyrus) என்பதாகும். பிப்ளோஸ் என்பது இன்றைய லெபனான் நாட்டிலுள்ள ஒரு துறைமுகப்பட்டினம். புத்தகம் எழுதப் பயன்படும் "பப்பைரஸ்" (papyrus) என்னும் ஒருவகை நாணல்புல் விற்கப்பட்டது அந்த பிப்ளோஸ் நகரத்தில்தான் (papyrus) என்னும் சொல்லிலிருந்தே Paper என்னும் ஆங்கிலச் சொல் பிறந்தது).
ஆக, பப்பைரஸ் விற்கப்பட்ட பிப்ளோஸ் நகரத்தின் பெயரால் Biblion என்னும் சொல் புத்தகத்தை (Book) குறிப்பதாயிற்று. "The Book" என்பது பன்மையில் Biblia என்று ஆகும். இந்தச் சொல் இலத்தீனில் ஒருமையில் பயன்படுத்தப்பட்டு, "The Book" என்னும் பொருள் தருவதாயிற்று. நூல்களில் எல்லாம் உயர்ந்த நூலாகிய விவிலியத்தை எந்த ஓர் அடைமொழியுமின்றி "நூல்" ("The Book") என்றே அழைக்கலாமன்றோ!
|